ஆனால் தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளும் ஏற்கெனவே ஒரு முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன. இதில் எந்த அணி கிண்ணத்தை வென்றாலும் 2ஆவது முறையாக கிண்ணத்தை வெல்லும் முதல் அணி என்ற சாதனையை படைக்கும்.
இந்தியாவில் நடைபெற்றுவந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
நாளை இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற நிலையில் முதல் சுற்றில் தெரிவான பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்தியா, அவுஸ்தி ரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இணைந்து சுப்பர் –10 சுற்றில் மோதின.
சுப்பர் – 10 சுற்று முடிவில் நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
நடப்பு சம்பியனாக களமிறங்கிய இலங்கை அணி சுப்பர் – 10 சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றியது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்தது.
இதன் மூலம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
முன்னதாக 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2ஆவது அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப்போட்டியில் கால்பதித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதும் இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டில் சம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இதுவரை நடைபெற்ற 5 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்களிலும் வெவ்வேறு அணிகளே சம்பியன்
பட்டம் வென்றுள்ளன.
ஆனால் இந்த முறை 2ஆவது முறையாக ஒர் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்கவுள்ளது.
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதுவரை சம்பியன்கள்
2007 இந்தியா
2009 பாகிஸ்தான்
2010 இங்கிலாந்து
2012 மேற்கிந்தியத் தீவுகள்
2014 இலங்கை
2016 -?
0 comments:
Post a Comment