காலி, வதுரம்ப பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலிலிருந்து வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி யுவதி தனது 16 வயதில் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தனது வீட்டாருக்கு தெரியாமல் சென்று அந்த இளைஞருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சில காலத்தின் பின்னர் அந்த இளைஞனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விட்டு விலகி மீண்டும் குறித்த யுவதி தனது பெற்றோரிடம் வந்து சேர்ந்ததோடு அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று யுவதியின் தாய் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்த போது வீட்டில் தனது மகள் இல்லாதிருந்தமையால் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளதுடன் தனக்கு தெரிந்தவர்களிடமும் மகளைப் பற்றி விசாரித்துள்ளார்.
வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அயலவர்களின் உதவியுடன் மகளை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு மகளை கிடைக்காததால் காணாமல் போன யுவதியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இம் முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் நேற்று முன்தினம் இரவு காணாமல் போயிருந்த திலினி சுஹாசினி என்ற 18 வயதான யுவதியை சடலமாக மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட யுவதி கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் தனது முன்னாள் காதலனால் குறித்த யுவதி இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பாலியல் வன்புணர்வின் பின்னர் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் அப் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
0 comments:
Post a Comment