மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு இறுதியாக கடந்த 28ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஆர்.கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்கள் இருவரையும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் இம் மாதம் 25ஆம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment