சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின.
இதில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனான நெடுந்தீவைச் சேர்ந்த குலனாயகம் அமலநிக்சன் கணிதத்தில் ஏ-சித்தியையும் ஆங்கிலம், குடியுரிமைப் பாடங்களில் பி-சித்தியையும், கிறிஸ்தவம், தமிழ், வரலாறு, சுகாதாரப் பாடங்களில் சி-சித்தியையும், சங்கீதம், விஞ்ஞானத்தில் எஸ்-சித்தியையும் பெற்றுள்ளார்.
இதே போன்று மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்கும் பருத்தித்துறையைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அனந்தினி 5 பாடங்களில் சி-சித்தியையும் 3 பாடங்களில் எஸ்-சித்தியையும் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment