வவுனியாவில் நேற்று17.03.2016 காலை ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவினை பொதி செய்து மறைத்து வைத்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, வவுனியா போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11மணியளவில் குறித்த பேரூந்தில் ஏறிய பொலிசார் கஞ்சாவுடன் சென்ற நபரைக் கைது செய்ததுடன் குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 27வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர்
விசாரணையின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment