பொதுசன உதவித் தொகைக்கான நிதி மாகாண சமூக சேவைகள் திணைக்களத் தால் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் அனுப்புவதில் காதாமதம் ஏற்படுவதனால் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவை பெறும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், விதவைகள், நோயாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.
சமூக சேவைத் திணைக்களத்தினால் வழ ங்கப்படும் மாதாந்த உதவிப் பணம் அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர்த்து மாற்றுத் திறனாளிகள், விதவைகள் விசேட நோயாளர்கள், 70 வயது மேற்பட்டவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக, தபாலகங்களில் மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவாகும்.
ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதிக்கு முதல் 15 ஆம் திகதி வரை கொடுப்பனவுகள் தபாலகங்களில் வழங்கப்படும் வகையில் கொடுப்பனவு உறுதி சிட்டை பிரதேச செயலகங்களால் அந்தப் பகுதி தபாலகங்களிற்கு வழங்கப்படும். கொடுப்பனவை உறுதிப்படுத்துவதற்காக கொடுப்பனவு பெறு பவர்கள் அவர்களின் பெயர் இடப்பட்ட அட்டையை சமர்ப்பித்து மாதாந்த கொடுப்பனவை 250ரூபா முதல் 2000 பெற்றுக் கொள்வார்கள். ஆனால் பிரதேச ஒதுக்கீடு செயலகங்களினால் உரிய காலப்பகுதியில் வழங்கப்படுவதில்லை. சமூக சேவைத் திணக்களங்களினால் இன் னும் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆகை யால் உரிய தினத்தில் கொடுப்பனவு உறுதி சீட்டுகளை வழங்க முடியாதுள்ளது என காரணம் கூறப்படுகிறது.
இந்தக் கொடுப்பனவை பெறுபவர்களில் நோயாளிகள், வயதானவர்கள் உதவிப் பண த்தை பெற்றுக் கொள்வதற்கு ஒரு உதவியாளருடன் தான் வர முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள். தினமும் தபாலகங்களிற்கு வந்து அலைந்து திரிவதையும் அங்கு அம ர்ந்து செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
மாதாந்த வேதனத்தை உரிய தினத்தில் பெறும் அரச அதிகாரிகளால் மாதாந்த உத விப் பணத்தை உரிய தினத்தில் வழங்கிட முடிவதில்லை என கவலை தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த கொடுப்பனவைத் தயாரித்து வழங்கும் சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் மாதாந்த கொடு ப்பனவு பெறும் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களை, தங்களது தாய், தந்தை யர் சகோதரர்கள் என நினைத்து உரிய தின த்தில் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோருகின்றனர்.
0 comments:
Post a Comment