வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள்.
இப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.
சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள். இவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள்.
மனைவிகள் அவர்களுடைய வாழ்க்கையை கவனிப்பதில், வேலை பார்ப்பதில், குழந்தைகளை கவனிப்பதில், மாமனார் மாமியாரை கவனிப்பதில் அல்லது பெற்றோர்களை கவனிப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது, கணவன்மார்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாசத்தை எதிர்பார்ப்பார்கள். மனைவி என்ன தான் மனம் விரும்பிய படி நடந்தாலும், சில ஆண்கள் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி ஊக்கப்படுத்துவதால், அது கிடைக்காத வீட்டின் மீது நாட்டம் குறைந்து ஏமாற்ற தோன்றும்.
தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்ற உணர்வு ஒரு ஆணுக்கு எப்போது எழுகிறதோ, அப்போதே அவளைப் புரிந்து கொண்டு தலையில் வைத்து தாங்கும் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். இந்த புது உறவு ஏற்பட்ட காரணத்தினால் தான், எதிர்பார்த்ததை புதிதாக வந்த பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக கிடைக்காத இந்த கவனிப்பு திடீரென்று வேறு ஒரு பெண்ணின் மூலமாக கிடைப்பதால், அந்த புது உறவுடன் ஐக்கியமாகி விடுவார்கள்.
0 comments:
Post a Comment