இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கையின் வரைபு நேற்று கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவி;க்கிரம இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மலிக் சமரவிக்கிரம இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வரைபின் ஒரு நகல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் பதில் 3 வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் இணக்கம் ஏற்பட்டவுடன் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment