ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நடவடிக்கையானது அரசாங்கத்தின் ஏமாற்று நாடாகம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை பிழையான வழியில் நடாத்தும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு மோட்டார் சைக்கிள்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதி சேர் வரி 15 வீதமாக உயர்த்தப்பட்டமை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் எனவும், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க் கட்டணங்களும் உயர்வடையக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment