வடக்கு கிழக்கில் மோசடியான வியாபாரங்கள் இடம் பெறுகின்றது என்று வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்களாயினும் மக்களுக்கு நியாயமான முறையிலே கிடைக்கப்பெற வேண்டும். எமது வடக்கு கிழக்கிலே நுகர்வேர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புனர்வு அற்ற நிலையிலே அல்லது உறைநிலையிலே மக்கள் காணப்படுவதோடு இங்கே பல மோசடியான வியாபாரங்கள் நடைபெறுவதை காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையிலே நுகர்வோர் அதிகார சபை இம்மாகாகாண மக்களுக்கு நுகர்வோர்களுக்குரிய நினைவுபடுத்தி அந்த உரிமைகளை தமது வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை நுகர்வோர் பதுகாப்பு சபைக்குள்ளது.
இன்று (15.03.2015) வவுனியா காமினி மகாவித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு ஒழங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மபால, ரிப்கான் பதியுதீன், தர்மபால செனவிரத்தின, ஜெயதிலக்க, வவுனியா மாவட்ட செயலாளர் ரோகண புஸ்பகுமார, பிரதேச செயலாளர் உதயாஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment