தோட்டத்தில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர், தோட்ட பொதுமக்கள், அயலவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காட்டேரி அம்மன் என்பது அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாகும். பத்திரகாளியின் ஒரு அவதாரமாகும். அம்மனின் ஆலயத்தை அரக்கர்களும், அசுரர்களும் இடித்து உடைக்க முற்படும் போது அரக்கர்களையும், அசுரர்களையும் அடித்து வெளியே துறத்தும் சம்பவமே இந் நிகழ்வு ஆகும்.
இந்த விழாவை கொண்டாடுவதன் மூலமும் காட்டேரி அம்மனை வணங்குவதன் மூலமும் மக்களின் தீராத நோய் குணமாகுதல், குழந்தைப்பேறு, நினைத்த காரியங்கள் நிறைவு, தோட்டத்திற்கு பாதுகாப்பு, பேய், பிசாசுகளிலிருந்து விடுதலை போன்றன கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இவ் விழாவை பார்வையிடவும் நேர்த்திக் கடன்களை தீர்க்கவும் பல மக்கள் கூட்டம் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை ஒரு விஷேட அம்சமாகும்.
0 comments:
Post a Comment