தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, நடைபெறவுள்ள 2016 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்கள் சங்கம் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார், தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ், பொருளாளர் ஆர். நடராஜன், துணைத் தலைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் மற்றும் தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சந்திரசேகர் ஆகியோர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment