கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிவேக வீதி மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதென அந்த பிரிவின் பணிப்பாளர் அனுர தம்மிக்க குமார கூறியுள்ளார்.
முற்கொடுப்பனவு முறையின் மூலம் வாகனங்கள் அதிவேக வீதியூடாக தொடர்ந்து பயணத்தை முன்னெடுக்க இயலும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த புதிய முற்கொடுப்பனவு முறையில் தங்களைப் பதிவுசெய்து கொள்வதற்காக வாகனப் பதிவு சான்றிதழின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திர பிரதி என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment