குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையங்கிரி, கூலி தொழிலாளி. இவரது மனைவி சுசீலா. அவர் கணவரிடம் கோபித்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து வெள்ளையங்கிரி, லதா (வயது 35) என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். லதா வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கிராமத்தில் உள்ள சிலர் வெள்ளையங்கிரியிடம் கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த வெள்ளையங்கிரி, மனைவி லதாவை கையும் களவுமாக பிடிக்க எண்ணினார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு கிராமத்திலேயே கண்காணித்து வந்தார்.
அப்போது மதிய வேளையில் லதா கிராமத்திற்கு சற்று தொலைவில் உள்ள தோப்பிற்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வெள்ளையங்கிரியும் அங்கு சென்றார். அங்கு கள்ளக்காதலனுடன் லதா உல்லாசமாக இருந்தார். அதைக்கண்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையங்கிரி, அவர்கள் இருவரையும் கண்டித்தார்.
அப்போது லதாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து வெள்ளையங்கிரியை தாக்க முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளையங்கிரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவை வெட்டினார். அதில் லதாவின் இடது உள்ளங்கை 4 விரல்களுடன் தனியாக துண்டிக்கப்பட்டது. கட்டை விரல் தனியாக துண்டித்து கீழே விழுந்தது. லதா அலறியபடி உயிருக்கு பயந்து கிராமத்திற்குள் தப்பி ஓடினார். லதாவுடன் இருந்த நபரும் தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து வெள்ளையங்கிரி துண்டிக்கப்பட்ட லதாவின் உள்ளங்கையை ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி, தான் கொண்டு வந்த துண்டிக்கப்பட்ட உள்ளங்கை வைத்திருந்த கவரை கொடுத்து சரண் அடைந்தார். அதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம் தாலுகா போலீசார் வெள்ளையங்கிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment