புதன்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
பெண் சட்டத்தரணி சடலமாக மீட்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் சட்டத்தரணியும் அவரது கணவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சட்டத்தரணியை அவரது கணவர் கையால் அடித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கையால் அடித்த குற்றத்துக்காக சட்டத்தரணியின் கணவரை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
அக்கரைப்பற்று -7ஆம்பிரிவு கலாசார மண்டப வீதியைச் சேர்ந்த உயிரிழந்த பெண்சட்டத்தரணி லோகராஜா நிதர்ஷினி (28வயது) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் கடமையாற்றி வந்தார்.
கடந்த திங்கட்கிழமை மாலை கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
அதன்பின் அன்றிரவு 7.00 மணியளவில் மனைவியான பெண் சட்டத்தரணி வீட்டின் அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
நீதிபதி திருமதி நளினி கந்தசாமி சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து சடலம் புதன்கிழமை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment