
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விவசாய கண்காட்சி இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் புதன் கிழமை வரையிலான மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாந்தி சிறீஸ்கந்தராசா,கௌரவ விருந்தினர்களாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா,வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இதன் போது குறித்த கண்காட்சியினை மத்திய விவசாய திணைக்களம்,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை உள்ளடங்களாக சுமார் 22 திணைக்களங்கள்,வங்கிகள் இணைந்து குறித்த கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.
‘சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாய உற்பத்தி’ எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி இடம் பெற்று வருகின்றது.
சுழலை பாதிக்காத விவசாய நடைமுறையை ஒத்த பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கி மேற்படி கண்காட்சி அமைந்துள்ளது. குறித்த கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள்,விவாயிகள்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மாதர்,கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதி நிதிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















0 comments:
Post a Comment