
வவுனியா ஜே.பி.கே சொப்பிங் கொம்ப்ளக்ஸ், கேபிகே சென்ரர் ஆகியவற்றின் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய கு.பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர்களினால் அவர்களுடைய அன்னையார் புவனேஸ்வரியின் நினைவாக இந்த அன்பு இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா குடியிருப்பைச் சேர்ந்த கு.புவனேஸ்வரி அவர்களின் ஒரு வருட நினைவஞ்சலியையொட்டி, அவரது நினைவாக இந்த அன்பு இல்லம் குடியிருப்பு பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் கந்தசாமி குருக்கள் மற்றும் திருமதி அன்னபாக்கியம் ஆகியோரினால் இணைந்து வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது
இந்த வைபவத்தின் போது, பார்வை குறைபாடுடைய வசதியற்றவர்களான 300 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்;டன. வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த வசதி குறைந்த பாடசாலை மாணவ மாணவிகள் 160 பேருக்குப் பாடசாலை உபகரணங்களும்; வழங்கப்பட்டன.
வவுனியா பொது மருத்துவமனைக்கு படுக்கை 100 விரிப்புக்கள் மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் கே.அகிலேந்திரனிடம் கையளிக்கப்பட்டது
வேப்பங்குளம் இந்து அன்பு இல்லத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் திருமண அன்பளிப்பு ஒன்றும் திருமதி புவனேஸ்வரி அவர்களின் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.இந்த அன்பு இல்லத்தில் வசதியற்ற வயோதிபர்கள்,
வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கான வைத்திய சேவைகள், வறிய பாடசாலை மாணவர்களுக்கான உதவி கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட சமூக சேவைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக திருமதி புவனேஸ்வரி அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம்,வர்த்தகர் அ.தணிகாசலம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், செலான் வங்கி, சம்பந் வங்கி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment