சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் தினக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன இன்று முக்கிய அதிதியாக கலந்து கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு இணையான கௌரவம் அவருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, இலங்கையின் அரசியல் களத்தில் பெண்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த அதேநேரம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் போராட்டங்களை நடத்திய பல்வேறு அரசியல் தலைவர்களையும் கொண்ட இலங்கையின் முக்கிய அரசியல் கட்சியாகும்.
அவ்வாறான ஒருகட்சியில் அரசியலுக்கோ, பெண்களின் முன்னேற்றத்துக்கோ எதுவித பங்களிப்பும் வழங்கியிராத சதுரிக்கா சிறிசேன கட்சியின் தேசிய வைபவம் ஒன்றில் முக்கிய அதிதியாக கலந்து கொண்டுள்ளமை கட்சிக்குள் சிறிசேன குடும்ப ஆதிக்கம் பெருகி வருவதன் வெளிப்படையான எடுத்துக்காட்டாகும்.
இதுகுறித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் மத்தியில் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் தற்போது சிறிசேன குடும்பத்தினருக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன.
தற்போது ராஜபக்ஷ குடும்ப அரசியலையும் மீறிய குடும்ப அரசியல் கலாசாரமொன்றை நோக்கி சிறிசேன குடும்பத்தினர் பயணித்துக் கொண்டிருப்பதாக நடுநிலை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
0 comments:
Post a Comment