இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வாக பதிவான முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதத்தின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 145.56 ரூபாவாக காணப்பட்டதுடன் அதன் விற்பனை பெறுமதி 149.54 ரூபாவாக காணப்பட்டது.
கடந்த வாரம் மார்ச் மாதம் 24ம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 143.91 ரூபாவாகவும்
விற்பனை விலை 147.87 ரூபாவாகவும் காணப்பட்டது. அதன் படி இரண்டு வர்த்தக நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 1.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் எதிர்வரும் காலத்தில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அந்தவகையில் தங்கம், எரிபொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளின் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படும் என துறைசார் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment