உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில் புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட்டால் உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. இதை முயல்களுக்கு கொடுத்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது அது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி விடுகிறது.
இதனால் அந்த ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாது. இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு வருடத்திற்கு வேலை செய்யும்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ரொனால்ட் கூறும்போது, இதை மனிதனுக்கு பயன்படுத்துவது சம்மந்தமாக இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது.
அதன்பிறகு இதை மனிதன் பயன்பாட்டுக்கு அனுப்பி வைப்போம். இது நல்ல செயல்பாடுகளை தருகிறது. முயல்களுக்கு கொடுத்து பரிசோதித்த போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பயனை கொடுத்தது என்றார்.
0 comments:
Post a Comment