பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், ஒரேயொரு பாடல் மட்டும் படம்பிடிக்காமல் இருந்து வந்தது.
டி.ஆர் பாடிய ‘மாமன் வெயிட்டிங்’ என்ற அந்த பாடலுக்கு சிம்புவும்-நயன்தாராவும் ஆடுவதாக இருந்தது. ஆனால், நயன்தாரா இந்த பாடலுக்கு நடனமாட எதிர்ப்பு தெரிவிக்கவே, அடா ஷர்மாவை வைத்து இப்பாடலை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த சில நாட்களாக சென்னை எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் இந்த பாடல் படம்பிடிக்கப்பட்டு வந்தது. சிம்புவுக்கே உரித்தான குத்து பாடல் என்பதால் இந்த பாடலில் மிகவும் வித்தியாசமான முறையில் நடனம் அமைத்துள்ளாராம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்.
குறிப்பாக, இப்பாடலில் சிம்பு தொடர்ச்சியாக 70 வினாடிகள் ஒரே காலில் நடனம் ஆடியுள்ளாராம். வெறியுடன் சிம்பு ஆடிய இந்த நடனத்தை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்களாம்.
இப்பாடல் பதிவு முடிவடைந்துவிட்டதாம். பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment