
இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை தற்போது டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் பலகோடி மதிப்பில் அரங்குகள் அமைத்து நடத்துகின்றனர்.
‘2.0’ படத்தின் கதை, ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் தோற்றங்கள், ரோபோக்கள் போன்றவற்றை ஷங்கர் ரகசியமாக வைத்துள்ளார். படப்பிடிப்புகளுக்கு வெளியாட்களை அனுமதிப்பது இல்லை. துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த படப்பிடிப்பில் அக்ஷய்குமார் நடித்த காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பரவ விட்டுள்ளனர்.
அக்ஷய்குமார் எந்திரன் தோற்றத்தில் மிரட்டலாக இருந்தார். அவரது தோற்றம் வெளியானதால் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்தை வெளியிட்டவர் யார் என்று விசாரணை நடக்கிறது.
ரஜினிகாந்த் டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் 28-ந்தேதி முதல் கலந்து கொள்கிறார். இதையடுத்து மேலும் படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்புக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து ‘ஜிம் பாய்ஸ்’ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டு உள்ளது. படப்பிடிப்புக்கு வரும் துணை நடிகர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
பைகள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனுக்கு ஏற்கனவே அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும் மறைத்து யாரேனும் கொண்டு சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சோதனை நடத்தி உள்ளே அனுமதிக்கின்றனர்.
சிறிய அளவில் கேமராக்களை மறைத்து எடுத்து வருகிறார்களா? என்றும் கண்காணிக்கின்றனர்.

0 comments:
Post a Comment