வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தனது சுய விருப்பத்துடன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது அருகில் உள்ள வீட்டின் இளைஞன், குளிர் பானத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை கலந்து தருவதாக கூறி கொடுத்துள்ளார்.
எனினும் குறித்த இளைஞன் அதில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.
அடுத்த நாள் குறித்த இளைஞன், தொலைபேசி மூலம் அழைத்து எதோ ஒரு விடயத்தை கூறியதாகவும் ஆனால் அது தனக்கு புரியவில்லை எனவும் அந்த சிறுமி காவற்துறையிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமிக்கு குழந்தை பிறந்ததன் பின்னரே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment