2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு 5 இலட்சத்து 46 ஆயிரத்து 379 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆண்டு தோறும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கும் இடைப்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆண்டுதோரும் 165 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிதியொதிக்கீடு ஆண்டுதோரும் ஓய்வுதியம் பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதியும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment