ஸ்ரீலங்கா கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் 500 மீனவர்களை 15 நாட்களுக்குள் கைதுசெய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கடலோர காவல் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்படும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகு மற்றும் மீன்பிடி வலைகள் திருப்பி கையளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பண்ணையில் அமைந்துள்ள யாழ். நீரியல் வள திணைக்களத்தில் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளை சந்தித்த கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா அயல் நாடாக உள்ளதால் நேரடியாக பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என குறிப்பிட்ட அவர், எமது நாட்டு மீனவர்களின் நலன்களையும் பாதுகாக்கவேண்டியுள்ளதாக கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் வடமாகாணத்தல் உள்ள நாடாளுமன்னற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இணைந்து கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அழுத்தங்கள் கொடுக்கும் பட்சத்தில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் உபகரணங்கள் விடுவிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment