வடக்கு காணிகளை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீளவும் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பல ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் பாரியளவிலான காணிகள் தொடர்ந்தும் இலங்கை இராணுவம் வசம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பலாலியில் இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் காணிகள் யுத்தத்தின் போது அச்சம் காரணமாக காணிகளை விட்டுச் சென்றவர்களுக்கு சொந்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் சிங்களவர்களுக்கு உண்மையிலேயே காணிகள் காணப்பட்டால் அவற்றை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சில பகுதிகளில் சிங்கள மக்கள் சட்டவிரோதமான முறையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment