இராக்கில் ஐந்து மாதங்களுக்கு பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகளை, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்
மோசுல் நகருக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் மூன்று தனித்தனி நகர்கள் மீது நூற்றுக்கணக்கான ஐ எஸ் அமைப்பின் ஆயுததாரிகள் தாக்குதல்களை நடத்தினர் என, இராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ ஜெனரல் ஒருவர் கூறுகிறார்.
இத்தாக்குதல்கள் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளன.
எனினும் இத்தாக்குதல் கூட்டுப்படைகளின் வான் தாக்குதல்களின் துணையுடன் குர்திஷ் படைகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்த எதிர்த்தாக்குதலில் சுமார் 180 ஐ எஸ் ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அமெரிக்கா கூறுகிறது.
தமது தரப்பில் டஜன் கணக்கான போராளிகள் உயிரிழந்துள்ளதாக குர்திஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இராக்கிலுள்ள சிஞ்சார் நகரை இழந்த ஐ எஸ், வேறு இடங்களில் நில்லப்பரப்பை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
இதனிடையே வியாழக்கிழமை நாட்டின் மேற்குப் பகுதி நகரான ரமாடியை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற போரில், தமது படைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர் என இராக்கிய அரசு கூறுகிறது.
0 comments:
Post a Comment