வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நிதி அமைச்சில் வாகன இறக்குமதியாளர் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
அரசாங்கம் தொடர்ந்தும் நிலையான நிலைப்பாட்டைப் பேணுவதனையே விரும்புகின்றது. அடிக்கடி தீர்மானங்களை மாற்றவதனால் எந்தவொன்றினதும் உறுதித் தன்மையைப் பேண முடியாது.
எனவே, வாகனங்களின் விலைதொடர்பில் சந்தையில் குறிப்பிடும் தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் எனவும் நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
0 comments:
Post a Comment