தமிழ் மக்கள் வாழ்வில் புதுமைகள் பிறக்கட்டும் என்று சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியின் விபரம் வரமாறு,
எல்லாம் வல்ல மீட்பராகிய இயேசுகிறிஸ்து பிறந்த இந்த இனிய நாளை நத்தார் பண்டிகையாக கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ உறவுகளுக்கும், கிறிஸ்துவை பின்பற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் உங்களில் ஒருவனாய் தன்நிறைவடைகின்றேன்.
இந்த உன்னத நாளில் தமிழ் மக்களின் நீண்டகால முரண்பாடுகள் நீங்க பிரார்திப்பதுடன் இம்மாத ஆரம்பம் முதல் எமது நாட்டிலும் எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களுக்கான மறுவாழ்வினை அளிக்க வேண்டி இயேசுபிராணை பிரார்திப்போம்.
இனிவரும் காலங்களிலாவது இயேசுபிராணின் கிருபையினால் ஆட்சியாளர்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு எமது பிரதிநிதிகள் மனங்களில் தியாக உணர்வுடன் தன்னலமற்ற போக்கும் உருவாகி ஆக்க பூர்வமான செயற்பாடுகளின் மூலம் அடுத்துவரும் இயேசுபிராணின் பிறப்பை கொண்டாடும் போது எமது இனம் தன்னிறைவுள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு இனமாக பொழிவுறும் அதேவேளை இயேசு கூறிய "நீ உன்னை நேசிப்பது போல் உன் அயலவர்களையும் நேசி" என்னும் வாக்கினை பொன்மொழியாக ஏற்று எம்முடன் இணைந்த வாழும் சகோதர இனத்தவர்களையும் பிற மதத்தவர்களையும் நேசித்து எமது தேசம் அன்பால் எங்கும் நிறைந்து சுவிச்சம் பெற இறையருள் வேண்டி நிற்போம்.
அதே போன்று எமது மக்களை பிரதிநிதிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் பேதங்களையும் கசப்புனர்வுகளையும் மறந்து எமது மக்களின் மீட்சீக்காக ஒன்றிணைந்து செயற்படும் ஆற்றலை வழங்குவதுடன் சிறைகளில் நீண்ட காலமாக வாழம் அரசியல் கைதிகளின் விடுதலையினை உறுதிப்படுத்த இதயசுத்தியுடன் செயற்படும் வல்லமையினை வழங்கி அதன் மூலமாக அவர்கள் வாழ்விலும் ஒளியேற்ற இந்நாளில் அனைவரும் பிரர்திப்போம்.
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
சிறீ ரெலோ
0 comments:
Post a Comment