கம்பியா ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கம்பியாவின் ஜனாதிபதி யஹ்யா ஜம்மா இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது;
கம்பியா ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்யப்பட்டாலும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக யஹ்யா ஜம்மா காணப்படுகிறார்.
காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார்.
0 comments:
Post a Comment