அமைச்சர் ரவி கருனானாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதம் நடாத்த திகதி ஒன்றை கட்சி தலைவர்கள் சேர்ந்து தீர்மானிப்பார்கள் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும், வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றதன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல இதன்போது சுட்டிக்காட்டினார்.
வரவு செலவுத் திட்டத்தில் கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்த நிதி தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார் என்ற அடிப்படியில் கூட்டு எதிர்க்கட்சி அமைச்சர் ரவி கருனானாயகவுக்கு எதிராக நம்பிக்கையிலா பிரேணை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment