சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஐக்கிய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று இன்று 10-12-2015 கைச்சாத்திடப்பட்டது.
வவுனியா பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாக ஏற்படுகின்ற பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்கும் பொருட்டும் பெண்களுக்கு வழிகாட்டும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாக செயல்ப்படும் அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன.
இந்நிகழ்விற்கு பிராந்திய சுகாதார அதிகாரிகள், கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பெண்கள் சிறுவர் துஸ்பிரயோக பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment