வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்டோரின் அமைப்பான இணையும் கரங்கள் அமைப்பில் அங்கத்துவம் பெறும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இணையும் கரங்கள் அமைப்பின் தலைவர் சசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் ஒழுங்கமைப்பில் பிறேமா கைலைநாதன், விமலா சந்திரன். ராஜரெட்ணம் ஆகிய உறவுகள் நிதியுதவி வழங்கியிருந்தனர்.
0 comments:
Post a Comment