இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் போதேல்லாம் குரல் கொடுக்க யாருமற்றிருக்கையில் தம்மை ஆகுதியாக்கியும் போராட்டங்களை நடத்தியும் இலங்கையின் வடபால் நடந்த கோரத்திற்கு முகவரி தேடிக்கொடுத்த பலர் இன்று இயற்கையின் சீற்றத்தால் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந் நிலையில் இலங்கை வாழ் தமிழர்களாகிய தொப்புள் கொடி உறவு என பேச்சுக்கு அறிக்கை விட்டவர்களாக அல்லாமல் நாமாக அம் மக்களுக்கு உதவ வேண்டியது தலையாய கடமையாக காணப்படுவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இதன் காரணங்களை அடிப்படையாக கொண்டு பல உபகாரிகள் பலர் இன்று உதவுவதற்கு முன்வந்துள்ள போதிலும் அதனை பொறுப்படன் செயற்படுத்த வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளா சங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.
எனவே அவசரமானதும் அவசியமானதுமான உதவியை வழங்கும் செயற்பாடாக நீணட காலத்திற்கு பழுதடையாத உலர் உணவுகள் மற்றும் புதிய உடைகளை கோரி நிற்கின்றோம்.
ஆகவே அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள், வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம், பொது அமைப்புகள், வர்த்தகர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதுடன் பொருட்களை வவுனியா குருமண்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும் என்பதுடன் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாதவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் அவர்களது முகவரிகளில் வந்தே பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக தொடர்புகளுக்கு 0772260469, 0776550632, 0776288923, 0774988519 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment