புத்தாண்டுக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு பரிசுக் கூப்பன்கள் மற்றும் அன்பளிப்புகளை வழங்குவோருக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தாண்டு காலங்களில் பெரும்பாலும் பொலிஸ் மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிப்ட் வவுச்சர்கள் மற்றும் பரிசுப் பொதிகள் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்படுவதுண்டு.
அதன் மூலம் குறித்த நபர்களினூடாக தமக்கு வேண்டிய அலுவல்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் பரிசு வழங்குவோரின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில் இவ்வாறு கிப்ட் வவுச்சர்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்குவோர் மற்றும் பெற்றுக் கொள்வோர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
எனவே அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்கள் மற்றும் அன்பளிப்புகளை நிராகரிக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நண்பர்களுக்கிடையில் அன்பளிப்புகள் பரிமாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் யாரேனும் ஒருவர் அரச ஊழியர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கும் பட்சத்தில் அதன் நோக்கம் அன்பளிப்பு என்பதற்கப்பால் வேறு அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதாக இருக்கும் என்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment