முல்லையில் 72 பேருக்கு மாத்திரமே மீன்பிடிக்க அனுமதி! வெளி மாவட்ட மீன்பிடியாளர்கள் 350 பாராளுமன்றத்தில் K K மஸ்தான்



முல்லைத்தீவு மாவட்டத்தில் 72 பேருக்கு மாத்திரமே கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 350 வெளி மாவட்ட மீன்பிடியாளர்கள் இங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நியாமற்ற கட்டுப்பாடு தென்  இலங்கை மீனவர்களின்  ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கின்றது.எனவே இதனை நிறுத்த உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என

2015.12.09 ஆம் திகதி மீன்பிடி மற்றும் போகுவரத்துச் துறை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ K. காதர்மஸ்தான்  உரையாற்றினார் 

உரையின் முழு வடிவம் 

கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே!

வன்னிப் பிரதேச மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளை இந்த அவையில் முன்வைக்க விரும்புகிறேன்.

1,817.5கி.மீ.கடற்கரை வலயத்தையும், 517,000 சதுர கி.மீ. இலங்கைக்கே உரிய பொருளாதார கடல் வலயத்தையும், 1,000,000 சதுர கி.மீ. கடற்பரப்பையும் கொண்ட இலங்கையில் 2014 ஆண்டு 176,239 மில்லியன் ரூபா மதிப்புடைய 535,050 மெட்ரிக் தொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின்  மீன்பிடித் துறையில் சுமார் 2,75,000 மீனவர்கள் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களின் உழைப்பில் 1 மில்லியனுக்கும் அதிக மக்கள் தங்கி வாழ்கின்றனர். எனவே மீன்பிடித் தொழில் இலங்கையின் பொருளாதர மற்றும்சமூக அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மீன் வளம் மிக்க அயனக் கடலில், ஆழம் குறைந்த கடல் தளத்தைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இலங்கை, மீன் பிடியில் தன்னிறைவடைந்து மற்றைய நாடுகளுக்கும் மீன் ஏற்றுமதி செய்யும் காலம் வரும் என்ற கனவுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். கடந்த வருடம் 26,320 மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்த நாம், அதனைவிட மூன்று மடங்கு அதாவது 78,712 மெற்றிக் தொன் மீன் உற்பத்திகளை கருவாடாகவும், டின்னில் அடைக்கப்பட்ட மீனாகவும், மாசி மற்றும் ஐஸ் மீனாகவும்  இறக்குமதி செய்துள்ளோம்.

பாரிய எரிர்பார்ப்புக்களுடன் நிர்மானிக்கப்பட்ட பேலியகொட மீன் சந்தையிலும் இன்று சீனா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் விற்பனை செய்யப்படுகின்றமை, எமது கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டவர்கள் நவீன இயந்திர உபகரணங்களுடன் மீன் பிடிக்கின்றமை, தேசிய மீன்பிடித்துறையில் நீண்ட காலமாகத் தீர்கப்படாதுள்ள பிரச்சினைகள் எமது உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுதி மேம்பாட்டுக்குப் பாரிய சவாலாக உள்ளன.

மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் களப்பு வரையான நீண்ட கடற்பரப்பைக் கொண்ட வடமாகாணம் இலங்கையின் மொத்த மீன்பிடியில் 25% பங்களிப்பைச் செய்யும் ஆற்றலையும், வளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆரம்பத்தில் கடல் உற்பத்திகளுடன் கூடிய தொழிற்சாலைகள் போசாலையிலும், பருத்தித் துறையிலும் நிறுவப்பட்டிருந்தன. ஆனால் 30 வருட யுத்தம் காரணமாக கைவிடப்பட்டஅவைஇன்று வரை மீண்டும் இயங்கச் செய்யப்படாத நிலையில் உள்ளன.

யுத்தத்தின் பின்னடைவு, எமது வட கடல் பரப்பு தென் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கும், வட கடல் கரையோரம் தென் இலங்கை மீன்பிடியாளர்களின்ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டுள்ளது. யுத்த காலங்களில் வெளியேற்றப்பட்ட மன்னார் முஸ்லிம், தமிழ், சிங்களமக்கள் 2012 களில் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பும் வேளை முள்ளிக்குளம், கொக்குபடையான், சிலாவத்துறை வரையான கரையோரப் பகுதிகளில் கடற்படை மற்றும்இரானுவத்தின் ஆக்கிரமிப்பு ஒரு பக்கம், அதேபோல பிரதேச மீனவர் குடும்பங்கள் மீண்டும் குடியேற முடியாத படி “சுழல் பாதுபாப்பு”என்ற இனவாத வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் இன்று இந்த மக்களின் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மீன்பிடித் தொழிலுக்கும்,வன்னி மீனவக் குடும்பங்களின் ஜீவநோபாயத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க மறுபக்கம், பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தின் நடுவே அமையப்பட்டுள்ள பூக்குளம் எனும் குடியிருப்பில் இன்று தென் இலங்கையைச் சோ்ந்த 230 மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதாவது பரம்பரை மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ள அதேவேளை தென் பகுதி மீனவர்கள் சுழலியல் மையங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். 

இது ஒரு பாரிய அநியாயம், எனவே யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து மக்களினதும் ஜீவநோபாய வழிகள்30 வருடங்களுக்கு முன்னர் இருந்த அதே நிலையில் உறுதிசெய்யப்பட்டு அவர்களை தமது சொந்த மண்ணில் கௌளரவமான முறையில் மீண்டும் குடியமர்த்தப்பட்டு இயற்கையுடன் இரண்டரக் கலக்கவிடப்பட  வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில்,   முல்லைத்தீவு, கொக்குளாய், செம்மலை, நாயாறு, அலம்பில், உப்புமாவெளி, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை ஆகிய கிராமங்களில் சுமார் 3,000 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.இங்குசில மீன்பிடி தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, டைனமோ மூலம் மீன்பிடியை மேற்கொள்வதால் நீரியல் சூழல் தொகுதி பொிதும் பாதிப்படையும் அபாயத்துக்கு உட்பட்டுள்ளதுடன் சக மீனவக் குடும்பங்களின் எதிகாலத்தையும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 72 பேருக்கு மாத்திரமே கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 350 வெளி மாவட்ட மீன்பிடியாளர்கள் இங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நியாமற்ற கட்டுப்பாடு தென்  இலங்கை மீனவர்களின்  ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கின்றது.எனவே இதனை நிறுத்த உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுவாக மீள் குடியேற்றப்பட்ட வன்னி மீனவர்களுக்குத் தமது மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய இட ஒதுக்கீடு செய்யப்படாமை காரணமாக, குறிப்பாக தலைமன்னார் பியர் மற்றும் எருக்கலம் பிட்டி உட்பட பல பிரதேசங்களில் தமது வல்லங்கள், படகுகளை நிறுத்தி வைப்பதிலும், வலைகளை விரித்துக் காயவைப்பதிலும், பழுது பார்ப்பதிலும் பல இடைஞ்சல்களை எதிர்கொள்கின்றனர்.

தென் இந்திய மீனவர்கள் டோலர் படகுகள் மூலம் எமது நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் கொள்ளையில் ஈடுபடுவதால் வட மாகாண மக்கள் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் ஏமாற்றமடைந்த சமூகமாகவே தொடர்ந்தும்  உள்ளனர். கிழமையில்ஒன்றுவிட்ட மூன்றுதினங்களில்வட கடற்பரப்பில் ஊடுறுவும் இந்திய மீனவர்கள் மடிகட்டிய டோலர்கள் (Bottom Trawlers) மூலம் மீனை வாரி எடுக்கின்றனர். அதன் காரணமாக மறுநாள் கடலுக்குச் செல்லும் எமது மீனவர்கள் கூட வெறும் கையுடன் திரும்ப வேண்டிய துர்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு தலையீட்டு இந்திய மீனவர்களின் ஊடுறுவலை முழுமையாக நிறுத்த வேண்டும்.

பொதுவாகவன்னிப் பிரதேசத்தில், மீனவ சங்கங்கள் ஊடாக மீவர்களுக்குரிய பயிற்சிகள்,நுண் கடன் திட்டங்கள், மீன்பிடி மீன்பிடி உபகரணங்கள் பரவலாகவே வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளதுடன், குறிப்பாக இவர்களுக்கு பகுதி நேர மாற்றுத் தொழில் முயற்சிகளுக்கான வழிகாட்டல்களும் உதவிகளும் வழங்கப்படுவதனால் தொடர் மழை காலங்களிலும் பாரிய பொருளாதார நெருக்கடிகள் இன்றி வாழ்வைத் தொடர முடியுமாக இருக்கும்.

பிரதேசத்தின் கடல் வளமும் சாதகமான பௌதீக மற்றும் காலநிலைக் காரணிகளும்வரலாற்றுக் காலம் தொட்டு வன்னிப் பிரதேச கருவாடு உற்பத்திக்குதனியிடம் உள்ளது. இதனை மேலும் விருத்தி செய்ய மழைப் பருவத்திலும் கருவாடு பதனிட முடியுமான ‘Heat House’ நிறுவப்பட வேண்டும். அதே போல வெளிநாடுகளிலிருந்தான கருவாடு இறக்குமதியைக் குறைக்க அவற்றின் மீதான வரியை மூன்று மடங்காள் அதிகரிக்க வேண்டும்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் நன்நீர் மீன்பிடி திட்டத்தை மேம்படுத்தி மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, தண்ணிமுறிப்பு, முறிப்பு, முத்தயன்கட்டு, வவுனிக்குளம், பாவற்குளம்ஆகிய பிரதான நன்னீர் மீன்பிடித் தளங்களில் அதனை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்துத் துறையைப் பொறுத்த வரையில்,வவுனியா மாவட்டத்தில், கிடாச்சூரி, பாலமோட்டை,மடு,பாவற்குளம்,சாந்தசோலை,வாரிக்குட்டியூர்,  செட்டிகுளம்(நீலியா மோட்டை), திருவேகம, சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக அரபாநகர் வரை பேரூந்து சேவை இல்லாமல் உள்ளது எனவே குறைந்தது 10 புதிய CTB பஸ்களாவதுஇங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அதே போல, ஹலம்பவெவ ஊடாக ஸ்ரீபுர வரைக்கும் உள்ள வீதியில் போக்குவரத்திற்கான பேரூந்து சேவை இல்லாமையினால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆகவே அந்த ஊர்களுக்கான புதிய பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும், நாமல்புர 1, 2, 3, 4 இலிருந்து எஹட்டுகஸ்வெவ ஊடாக சம்பத்நுவர, வவுனியா வரைக்கும் பேரூந்து சேவை தேவையாக உள்ளது.இவை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மாவட்ட பேரூந்து நிலையம் இல்லாமை பயணிகளுக்குப் பாரிய அசௌகரியங்களைஏற்படுத்தியுள்ளது. தற்போது முல்லைத்தீவில் 24 பேரூந்துகள் பணியில் உள்ள நிலையில் 27 சாரதிகளே உள்ளனர். மேலும் 10 சாரதிகளும்,10 பொறியியலாளர்களும் (Mechanical Division) தேவையாக உள்ளது.

அதேபோல மன்னார் மாவட்டத்தைப் பொறுத்வரையில் மாவட்டத்தின் பிரதான பஸ்தரிப்பு நிலையம் மிகவும் பழமைவாந்ததும், பயன்பாட்டுக்கு பொறுதத்மற்றதாகவும் உள்ளது. ஏலவே இது தோடர்பாக நான் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளேன் அவர் அதனை முன்னுரிமைப்படுத்தி  புதிதாக நவின வசதிகளுடன் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அதற்காக வன்னி மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தொிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாகவே, தனியார் போக்குவரத்தில் Route Permit இல்லாமை காரணமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.மேற்படி அனுமதிப் பத்திரத்தை இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போக்குவரத்து சபைக்கு உட்பட்ட பிரிவில்  பொறியியலாளர், மின்னிணைப்பாளர், பணியாளர்கள் மற்றும்சாலை பரிசோதகர் பதவிகளில்  வெற்றிடங்கள் நிலவுகின்றன இவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
-      நன்றி-

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com