பண்டிகை காலங்களில், மது போதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளை கைதுசெய்வதற்கு 24 மணிநேர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தும் போது கைதுசெய்யப்படுகின்ற சகல சாரதிகளும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்
0 comments:
Post a Comment