திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம் பெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அடிக்கல்லினை நட்டு வைத்தார். ஆலய தர்மகர்த்தா க.ஸ்ரீதரனின் தலைமையிலான பரிபாலன சபையினர் இவ் ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர்.
இவ்வாலயம் கி.பி. 1650 ம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1982ம் வருடம் இவ்வாலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகள் காரணமாக திருப்பணி வேலைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டு இருந்தது.
இன்றைய அடிக்கல் நாட்டும் விழாவில், கிழக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தன் மற்றும் பெருமளவிலான அடியவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
0 comments:
Post a Comment