வவுனியா பிரதேச செயலகம் ,வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் ,தமிழ் விருட்சம் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சட்ட கருத்தரங்கு 25.11.2015 வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடை பெற்றது .
வவுனியா பிரதேச செயலாளர் திரு .கா.உதயராசா அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு மு.சிற்றம்பலம் சட்ட சிறப்பு உரையும்,
இடபெயர்வும் ,காணி பிணக்குகளும் என்ற தலைப்பில் சட்டத்தரணி செல்வி எம்,எஸ் .எப் ,சிப்கா அவர்களும் ,
பெண்கள் உரிமையும் ,சட்டமும் என சட்டத்தரணி செல்வி சாமிலா அபூபக்கர் அவர்களும் ,
பிள்ளைகள் உரிமையும் ,சமுதாய பொறுப்பும் ,பெற்றோர் கடமையும் என்ற தலைப்பில் சட்டத்தரணி திருமதி குணவதி அவர்களும் ,
இலவச சட்ட உதவியும் ,பொது மக்களும் என்ற தலைப்பில் சட்டத்தரணி செல்வி தர்சினி அண்ணாதுரை அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்
இந்த கருத்தரங்கில் கிராமசேவையாளர்கள் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் ,மாதர் அபிவிருத்தி சங்க தலைவிகள் உட்பட பலர் கலந்து பயன் அடைந்தனர் .
இந்த கருத்தரங்கு ஏற்பாடுகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் திரு மு .விஜயரத்தினம் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment