![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMS4oq8BwSLT3y4aabLYiBmLY2iWNIfCExu1ifFalK75M8INn5Jcx1UUuazzzR8G6IOAhscwZ1tjDD8KsnoFkLuowAvgB0n9QbNWThwiWFN8rPCLdp7OyHNx1Rz6c7-CyX0MbpwmRnAiJk/s200/3.jpg)
ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, கார்த்திகை 27 அன்று வவுனியாவில் ‘மாவீரர்நாள்’ அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாலை 06 மணி 05 நிமிடத்துக்கு ஆலய மணி மூன்று முறை ஒலிக்க விடப்பட்டதைத்தொடர்ந்து,
முதன்மைச்சுடரை அரசியல் கைதி ஒருவரின் தாயாரும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா ஆகியோரும் ஏற்றினர்.
மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழர் தாயகத்தை குறிக்கும் தமிழீழ உருவப்படத்துக்கு, பிரஜைகள் குழுவின் செயலாளர் , ஊடகப்பேச்சாளர், பொருளாளர், ஆகியோருடன் இணைந்து நகரப்பகுதி இளைஞர்கள் ஒளி ஏற்றினர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixfX1rEzwMrV23Md9WjyJhQBq4qiAdY1Xbphk8xhuq8jjhRpcmtHdeLFj_ljMEEw3S3mL8m9Mc1moa8wcGipnv03C9hyUPS2DzgMAuWeGgJmjeI75zCP-dzqBs2dA16MdYwNClARWxTUU4/s640/2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIb-5nG67lwW8wm2qnIDTGU8EnwF6aMa5A-4r3y3-LWqtzgQ4XKZo7u70wyydmB7uV4V7kPq3503lwoRpi6iIS_1k18heqB_gzFs_mYDdZHGfGOVBdKQrdqbChosp2f2C1PX8QQj9VMlR3/s640/3.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl0SbMj8mIaZ_koKItTMZw6CiSokjcs7gl6uZ5lGiOlIDCbKDB-342CCu5OjmylmWX_0MXTIzGFip_vSifH23RHzmxerW_yJku4w5zlaGVKDXICr4jZ6gyRXLHxmJweE8vLUqCEIhHhq5c/s640/4.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzh4gdka9c7hPe3A9IoHfCBrSCXQOzM-4zevBWT3wdcKgHndVWXMpvDIksmaGJj_acNgtiPn_zoZTKRSw-RdGm8daGbSEquKiV54jBVpO7glnv5oZMUWjlHYPxJ-5IGT7Lb1x-fe451ucO/s640/6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuCZa-kd62ZErk8vfDXNfx_nRpDZt3p_AbiCMll5F3JrSYJPWPcNlW9CLrB6ozqSqWCCL4AgU7bm4mj4l3E4kuVODpsj3T0YrilEFv7EaT8hIQrbd3BYOkewUUj35OATmvL5fWTXn4xZ2Y/s640/7.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsrAFXDsDaeB9-ZqvabwJ4z260MrCHq7oRXcqBO8uosZzpgA51GR_-Z1Cr8sF2Fq0oup9W5eCLmDTAANyop7d-iRvtpwWeKLSgqwUzCixSqb5DCwt0LKIo9nHbgtQ7PPwWBVQjl2_EQpNt/s640/8.jpg)
0 comments:
Post a Comment