தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதனால் தமக்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்று தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்து வருவதனால், தமக்கு ஓர் குண்டு துளைக்காத வாகனம் அவசியம் என அவர் கோரியுள்ளார்.
தமது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
TNN
0 comments:
Post a Comment