2005ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி, 30 வருடங்கள் நீடித்த போரை மூன்றரை மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொரகொல்லகம கிக்கவெவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறினேன். அபிவிருத்தியை ஆரம்பித்தேன்.
முழு நாட்டிலும் வீதிகள், வைத்தியசாலைகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்தேன்.
தற்போது இந்த அபிவிருத்திகள் ஓரிடத்தில் நின்று போயுள்ளன.
அரசாங்கம் ஒன்று மாறும் போது நடைபெற்ற வந்த அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அபிவிருத்திகளை நிறுத்த முடியாது. ரிலே ஓட்டம் போல். குச்சியை எடுத்து கொண்டு ஓட வேண்டும்.
இந்த அரசாங்கம் 180 நாட்கள் நாட்டை ஆட்சி செய்தது. 100 நாளில் செய்வதாக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை.
நாம் மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கினால் அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment