இரவு 7 மணிக்கு பின்னர் பிரசாரங்களுக்காக வீடு வீடாக செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அனைத்து வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரவு நேரத்தில் பிரசாரங்களில் ஈடுபடுவதால் அனாவசிய குழப்பநிலையும், மோதல்களும் ஏற்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அந்தந்த பிரதேசங்களில் காவல்துறையினர் அனுமதி வழங்குவதை பொறுத்து பிரசாரங்களை முன்னெடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் மத்திய நிலையங்களில் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் அனைத்து கட்சிகளினதும் பிரதிகளை அனுமதிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment