முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்திற்கு ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்து கொண்டிருப்பதாக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கடிதங்களில் பெரும்பாலானவை தங்கள் பகுதிகளில் இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் தொடர்பானவையும் ரவுடிகளின் அட்டகாசங்கள் தொடர்பானவையாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி வரும் காலம் இவற்றுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தங்களுக்கு அரசியல் அங்கீகாரம் வந்தவுடன் முதல் முதலாக இச் செயற்பாடுகளை அடியோடு களைவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தங்களுக்கு தெரிவிக்க விரும்புபவர்கள் யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் அமைந்துள்ள தங்களது காரியாலயத்திற்கு நேரில் வந்தோ அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்,
0 comments:
Post a Comment