முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச நாடு முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த வைத்தியர்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டிச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பிரபாகரனின் மைத்துனர் குருணாகலில் மஹிந்தவிற்கு எதிராக போட்டியிடுகின்றார். மஹிந்தவை தோற்கடிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு போட்டியிடுகின்றார்.
எதற்காக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றீர்கள் என சிவாஜிலிங்கத்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, உயிரிழந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறுதிக் கனவை நனவாக்குவதற்கு என குறிப்பிட்டார். உயிரிழந்த பிரபாகரனின் இறுதிக் கனவு எதுவென்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
மஹிந்தவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பினையும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment