ஜனவரி 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்த சந்தர்ப்பத்தில் எமக்கு அரசு கிடைத்தபோதும், அதனை அதனை ராஜ்யம் செய்யும் அரசாங்கம் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
‘பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார், ஷிரந்தி ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ யோசித ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது மகாராஜாவை விசாரிக்க முடியவில்லை. எனினும் ராடா நிறுவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அது இன்னும் நிலுவையில் உள்ளது.
இவை அனைத்தையும் நாம் செயற்படுத்தும் போது மகாராஜா குழம்பிவிட்டார். ஊழல், மோசடி, கொலை, கொள்ளை என்பவற்றில் தொடர்புபட்டு அவரைச் சுற்றியுள்ளவர்கள் ஒன்றினைந்து செயற்படத் தொடங்கினர்.
அவ்வாறு ஒன்றினைந்தவர்கள் நாம் ஏற்படுத்திய இந்த அமைதியான புரட்சியினை மாற்றுவதற்கு பதில் புரட்சியொன்றை ஆரம்பித்தனர். இவ்வாறானவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆக்கிரமித்து, ஜனாதிபதியை ஒடுக்கி அவர்களின் போராட்டத்தை முன்னெடுத்தனர். இவ்வாறான ஒரு நிலையிலேயே ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்து நாடாளுமன்றத்தைக் கலைத்தனர்.
இதன்போது அவர்கள் சுதந்திரக் கட்சியனூடாக எமது பயணத்தை மீண்டும் திசைத்திருப்ப முயன்றனர். ஆனால் இந்த மக்கள் இந்த பயணத்தை ஆரம்பித்தது, அதனை மீண்டும் திசைத்திருப்ப அல்ல என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மக்கள் அன்று சகலவிதமான அதிகாரத்தையும், தன் கையில் வைத்திருந்த காட்டுமிரான்டி நபருக்கும், அரசிற்கும் எதிராக போராடினர். இவ்வாறான ஒரு நிலையில் எங்களுக்கு அரசு கிடைத்த போதும், அரசாங்கம் கிடைக்கவில்லை. அரசாங்க நிறுவன்ஙகளில் மஹிந்தவின் அதிகாரிகளே இருந்தனர்.
எனவே இந்த மக்கள் எங்களுக்கு அரசைத் தந்த போதிலும் எங்கள் கைகளில் அரசாங்கம் கிடைக்கவில்லை.” என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment